india

img

தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநிலத்தில் முதல்வராக அக்கட்சியின் ஒருங்கி ணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரி வால் உள்ளார். தில்லியில் ஆட்சி யை கலைக்கும் முனைப்பிலும், மக்களவை தேர்தலில் பிரச்சா ரத்தில் பங்கேற்காமல் தடுக்கவும்  மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத் தது. கெஜ்ரிவால் சிறையில் இருந்  தாலும், அவர் மாநில முதல்வரா கவே தொடர்கிறார். இந்நிலை யில், மாநகராட்சி பள்ளிகளில் மாண வர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் தொடர்பாக தில்லி அர சுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு  வெள்ளியன்று தில்லி உயர்நீதி மன்ற பொறுப்பு நீதிபதி மன்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை  கேட்ட பின் நீதிபதி மன்மோகன், “தில்லி மாநகராட்சி ஆணையர் தரப்பில் ரூ.5 கோடிக்கு மேலான ஒப்பந்தத்திற்கு நிலைக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிலையில், தற்போது வரை நிலைக்குழு அமைக்கப்படாதது  ஏன்? நிர்வாக விஷயத்தில் முடி வெடுக்க வேண்டியது, அரசின் கடமை. ஆனால் மாணவர்களின் கல்வி விஷயத்தில் அலட்சிய மாக இருப்பது நல்லது அல்ல.  இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க நேர்ந்தால் கடுமையான வார்த்தைகளை பிர யோகிக்க நேரிடும். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே நிர்வா கத்தை கவனிக்க முடியும் என்ற  அரசு தரப்பு வாதம் ஏற்க முடியா தது. நாட்டின் நலனைவிட தனிப்  பட்ட நலனுக்கே அதிக முக்கியத்து வம் கொடுக்கிறார். மேலும் அவர்  அதிகாரத்தில் மட்டுமே நாட்டம்  கொண்டு இருக்கிறார். நிலைக் குழு அமைக்கப்படாததால் தில்லி யில் பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன” என்று நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

;