india

img

உ.பி.யில் அதிகாரிகள்தான் ஆட்சி நடத்துகிறார்கள்.... அமைச்சர்களுக்கு ஒரு வேலையும் இல்லை....

லக்னோ:
ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அதிகாரிகள்தான் மாநிலத்தை ஆட்சி செய்கிறார்கள்.. அமைச்சர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்று அம்மாநில பாஜக செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான ராம் இக்பால் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ-வான ராம்இக்பால் சிங், பாஜக-வில் இருந்தாலும், மாநிலத்தில் நடக்கும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி விமர்சித்து வருபவர் ஆவார். இந்நிலையில்தான் அவர், ஆதித்யநாத் அரசு மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.“முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை அதிகாரிகள்தான் நடத்தி வருகிறார்கள். அவர்கள் அமைச்சர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதில்லை. முன்பு அமைச்சர்களை மாவட்ட அதிகாரிகள் சென்று சந்தித்து வந்தனர். தற்போது அமைச்சர்களே முயன்றாலும் அதிகாரிகளைச் சந்திக்கமுடியவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைப்பதில்லை” என்று கூறியுள்ளார்.

“நான் மட்டுமல்ல, பாஜகவிலுள்ள தலைவர்கள் பலரும் இதைத்தான் உணர்கிறார்கள். மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகளுக்காக நாங்கள் காவல் நிலையத்திற்குச் செல்வதற்குக் கூட தயங்குகிறோம்” என்றும் புலம்பியுள்ளார்.ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களையும் இதற்கு முன்னதாக, ராம் இக்பால் சிங் எதிர்த்துப் பேசியிருந்தார். விவசாயிகள் எதிர்ப்பால், மேற்கு உத்தரப் பிரதேசத்திற்குள் பாஜக தலைவர்கள் நுழைய முடியவில்லை என்று கூறியிருந்தார். “அதிகாரிகளால் அடிமட்ட அளவில் ஊழல் நடப்பது வழக்கமாகி விட்டது, அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். லக்னோவில் உள்ள ஜெய் பிரகாஷ் சர்வதேச மையத்தில் பல கோடி ரூபாய்வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச் சாட்டுகளை அடுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

;