games

img

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடம்!  

நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  

ஒருநாள் போட்டியில் சிறந்த, பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பந்துவீச்சாளர்களில் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் பும்ரா ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்டை பின்னுக்குத் தள்ளி பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.  

நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2வது இடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டும், 3வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடியும் உள்ளார்.  

அதேபோல் டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன்படி பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் முகமது ரிஸ்வான், 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் உள்ளனர்.  

இதேபோன்று, ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்த சூரியகுமார் யாதவ், 44 இடங்கள் முன்னேறி தற்போது 5வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், டி20 பந்துவீச்சாளருக்கான பட்டியலில் புவனேஸ்வர் குமார் 7 இடங்கள் முன்னேறி 14வது இடத்தில் இருந்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.  ஹர்சல் பட்டேல் 10 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார். 

;