facebook-round

img

ஏதும் அறியாத அந்த பிஞ்சுக்கு என்ன நியாயம் செய்ய போகிறோம்?

எந்த ஒரு செய்தியை வாசித்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் வாசிக்க வேண்டும் என்பது தான் முதல் பாடம்.

ஏனோ குழந்தைகள் தொடர்பான செய்திகளை வாசிக்கும் போது உணர்வுகளை கட்டுப்படுத்தி படிப்பது மிகுந்த சவாலாக இருக்கிறது.

உல்லாச வாழ்க்கைகாக ஆண் நண்பருடன் சேர்ந்து 1 1/2 வயது குழந்தையை தாயே தரையில் வீசி கொன்ற சம்பவம்.

7 வருட செய்தி வாசிப்பு அனுபவத்தில் கட்டுப்படுத்த முடியாமல் குரல் நடுங்கி வாசிப்பை நிறுத்தியது இதுவே முதல் முறை.

செய்தி வாசிப்பாளராக மன்னிப்பு கோரியும் ஒரு பெண்ணாக, தாயாக, சக ஜீவியாக அடி வயறு இன்னும் நடுங்குகிறது 😢😢

இவர்களின் சுயநலத்துக்கு அந்த பிஞ்சு எப்படி பொறுப்பாகும்? கைது செய்து தண்டனை கொடுத்தால் மனம் சமாதானம் அடைந்து விடுமா? ஏதும் அறியாத அந்த பிஞ்சுக்கு என்ன நியாயம் செய்ய போகிறோம்? இது உளவியல் ரீதியான பிரச்சனை என்று சப்பைக்கட்டு கட்டி விட்டு கடந்து செல்லத்தான் வேண்டுமா?

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னத தோழியான make up room கண்ணாடியிடம் அழுது தீர்த்து விட்டு இயலாமை பிடுங்கி தின்ன அடுத்த செய்திக்கு தயாராக சென்றுவிட்டேன் 😢😢

-Sarayu Sundararajan

;