districts

img

ஆட்சி மாற்றம் நிச்சயம்! சிதம்பரத்தில் கே. பாலகிருஷ்ணன் பேட்டி

சிதம்பரம், ஏப். 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே. பாலகிருஷ்ணன் தனது மனைவியும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரு மான பா. ஜான்சி ராணி யுடன், சிதம்பரம் மானா சந்து  நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

பின்னர், செய்தியாளர் களிடம் பேசிய அவர், “கடந்த 2019-ஆம் ஆண்டை விட இந்த தேர்தலில் ‘இந்தி யா’ கூட்டணி தமிழ்நாடு, புதுச் சேரி உள்பட 40 தொகுதி களையும் முழுமையாக கைப்பற்றும்” என்றார். “சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன் அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறு வார்” என்றும் “தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்ச யம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதி யாக இருப்பதை வாக்கு சேக ரிப்பின் போது தெரிந்து கொண்டோம்” என்றும் கூறினார்.

“10 ஆண்டுகால மோடி  ஆட்சியின் அவலங்களால் மக்கள் சந்திக்கும்  வாழ்வா தாரப் பிரச்சனைகள், அரசியல், பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றை முன்னிறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலை வர்கள் அனைவரும் பிரச்சா ரம் மேற்கொண்டோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதச்சார்பின்மையை பாது காப்பது, கூட்டாட்சித் தத்து வத்தை பாதுகாப்பது, இந்தி யாவின் பன்முகத்தன்மை யை பாதுகாப்பது, வேலை யில்லாத் திண்டாட்டப் பிரச்ச னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றையும் முன்னிறுத்தினோம்.

இந்த பிரச்சாரத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்தது. குறிப்பாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. ஆட்சி மாற்றம் தேவை என்பதை விரும்பினர். இத னால் ஆட்சி மாற்றம் ஏற்படு வது உறுதியாகியுள்ளது” என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

;