court

img

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: தில்லி அரசுக்கே அதிகாரம்! - உச்ச நீதிமன்றம்

தில்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
நாட்டின் தலைநகரும், யூனியன் பிரதேசமாக இருக்கும் தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த கோரி தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு மாற்றியது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும், மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும், அமைச்சரவை பரிந்துரைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 

;