பேஸ்புக் உலா

img

பார்... பார்... முழு சங்கியாக மாறிவிட்ட தேர்தல் ஆணையத்தைப் பார்!

பிரேம் சிங் தமங்க் - சிக்கிம் மாநிலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

அரசியலில் ஈடுபட்டு சிக்கிம் ஜனநாயக முன்னணியில் பங்கேற்றார். பல முறை அமைச்சராக இருந்தார்.

அதிலிருந்து விலகி சிக்கிம் புரட்சிகரக் கட்சியைத் துவக்கினார்.
2014 தேர்தலில் அவருடைய கட்சி 10 இடங்களைப் பெற்றது. (சிக்கிம் சட்டமன்றத்துக்கு 32 இடங்கள்.)

2017இல் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

2018இல் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

2019 தேர்தலில் அவருடைய கட்சி 17 இடங்களைப் பிடித்தது, தமங்க் முதல்வர் ஆனார்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம்.

தேர்தலில் போட்டியிடாமல் 2019 மே மாதம் முதல்வர் பதவி ஏற்ற அவர், ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் எம்எல்ஏ ஆகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் சட்டத்தின்படி அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இப்போது என்ன செய்வது?
கவலையே தேவையில்லை. பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து விட்டால் ஊழல்வாதிகள் கொலைகாரர்கள் எல்லாரும் புனிதப்பசு ஆகி விடுவார்கள்.
இவரும் அப்படியே.

எனவே, இந்துத்துவத் தேர்தல் ஆணையம், ஆறு ஆண்டுகளுக்குப் பதிலாக ஓராண்டு தண்டனை போதும் எனக் குறைத்து விட்டது.
எனவே, அவர் இப்போது தேர்தலில் போட்டியிடலாம். முதல்வராகத் தொடரலாம்.

வாழ்க ஜனநாயகம்!

Shahjahan R

;