தமிழகம்

img

சாத்தான்குளம் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு... 

திருச்செந்தூர் 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்விளை கிராமம். இதன் தெற்கு புறத்தில் சாத்தான்குளம் உள்ளது. இந்த கல்விளை கிராமத்தின் இந்திரா நகர் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் (ஓடை பாலம்) துர்நாற்றம் வீசியது.

ந்தப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிய நபர்கள் என்னவென்று தேடிய பொழுது தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சுமார் 8 வயது சிறுமி பிணமாக கிடந்தார். உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சாத்தான்குளம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 19). அவரது நண்பர் நித்தீஸ்வரன் (19) ஆகியோர் கைது செய்ப்பட்டனர். 

இந்நிலையில் இன்று சிறுமியின் உடல் உறவினர்களிடம் தரப்பட்டது. ஆனால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நிவாரணம் வழங்க வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் உறவினர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்த பின்னரே சிறுமி எப்படி இறந்தார் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும் என்பதால் போலீசார் உறவினர்களை சமரசம் செய்து வருகின்றனர்.  

;