தமிழகம்

img

வங்கியில் ரூ.1.47 கோடி கொள்ளை சிசிடிவி காட்சி வெளியீடு

திருச்சி:
திருச்சி பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருடர்களின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.திருச்சி திருவெறும்பூரில் பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் அக்டோபர்31 ஆம் தேதி காசாளர் ரவிச்சந்திரன் என்பவர்வங்கி லாக்கர் வேலை செய்யாததால் பணத்தை தனது இருக்கைக்கு கீழே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது சூட்கேசில் இருந்த ஒரு கோடியே 47
லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்துகொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கி கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் கொள்ளையன் தனி நபராக கையுறை, முகமூடியுடன் வந்து சூட்கேஸில் உள்ள பணத்தை தான் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

;