தமிழகம்

img

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தவர் கைது

திருச்சியில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆபாச படங்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். திருச்சியில் பாலகரை பகுதியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை நிலவன் ஆதவன் என்ற போலிப்பெயர்களில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று திருச்சி பாலகரை காவல் துறையினர் கிறிஸ்டோபர் அல்போன்சை கைது செய்துள்ளனர். 
 

;