தமிழகம்

img

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறிய 1,100 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தற்போது 2-ஆம் நிலையில் பயணித்து வருகிறது. முதல் நிலைக்குப் பரவாமல் இருக்கா 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவோர் தவிர வெளியில் சுற்றும் மற்ற நபர்களை போலீசார் எச்சரித்து வந்த வழியிலேயே திருப்பி அனுப்பி விடுகின்றனர். பொழுது போகாமல் இரு சக்கர வாகனத்தில் நகரை வலம் வரும் இளைஞர்களை போலீசார் அபராதம் விதித்து லத்தியடியுடன் அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் வாகனத்தைச் சிறைபிடித்து வழக்குப் பதிவு நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 1100 நபர்கள் மீது தொற்று நோய் தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;