தமிழகம்

img

பொருளாதார மந்தம் எதிரொலி: லான்சன் டொயோட்டா கார் ஷோரூம் உரிமையாளர் ரீட்டா தற்கொலை

கார் விற்பனை சரிந்ததால் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் தொழில் அதிபர் ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

பெண் தொழில் அதிபர் ரீட்டா (50) லான்சன் டொயோட்டா குரூப் ஷோரும் நிறுவனத்தின்  நிர்வாக  இணை இயக்குனராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில்  இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ரீட்டாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
நாடு முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக கார் விற்பனை சரிந்துள்ளது. லான்சன் குழுமத்தின் விற்பனையிலும் 7 சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளதாக ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். விற்பனை சரிவு காரணமாக ரீட்டாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விற்பனை சரிவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ரீட்டா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

;