ஞாயிறு, ஆகஸ்ட் 9, 2020

தமிழகம்

img

சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.192 கோடி

சென்னை, பிப்.16 கும்பகோணத்தை தலைமையிட மாகக்கொண்ட  சிட்டி யூனியன் வங்கி (சியுபி) மூன்றாம் காலாண்டில் ரூ.192.43 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2018-19ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.178.10 கோடியுடன் ஒப்பிடும்போது 8.04 சதவீதம் அதிகமாகும். மொத்த வருவாய் ரூ.1,086.45 கோடியிலிருந்து 11 சதவீதம் உயர்ந்து ரூ.1,203.23 கோடியானது. டிசம்பர் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.91 சதவீதத்திலிருந்து 3.50  சதவீதமாக அதிகரித்தது. நிகர வாராக் கடன் விகிதம் 1.74 சதவீதத்திலிருந்து 1.95 சதவீதமாக உயர்ந்தது என சிட்டி யூனியன் வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது என்று வங்கியின் நிர்வாக இயக்குனர்  மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி காமகோடி கூறினார். வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கடந்த வருட ஒத்த காலாண்டை விட மொத்த வருமானம்  11 விழுக்காடு உயர்ந்து  1203 கோடியாகவும் இதர வருமானம் 19 விழுக்காடு உயர்ந்து  142 கோடியாகவும் அதிகரித்துள்ளது.  நிகர லாபம் 8விழுக்காடு உயர்ந்து  192 கோடியாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்க ளில் வங்கியின் மொத்த வியாபாரம் கடந்த ஆண்டைவிட 11 விழுக்காடு உயர்ந்து ரூ.73,640 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், வங்கி யின் வைப்புத் தொகை (டெபாசிட்) மற்றும் கடன்கள் (அட்வான்ஸ்) கடந்த ஆண்டைவிட முறையே 12 விழுக்காடு, 10விழுக்காடு உயர்ந்து ரூ.39,812 கோடியாகவும், ரூ.33,828 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 

;