தமிழகம்

img

மின் கட்டண உயர்வை எதிர்த்து 21 ஆம் தேதி  திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை:
மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 21 ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற  அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கள் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு தொடர் பாக ஆலோசிக்கப்பட்டது.இதன்  முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 21 ஆம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  திமுகவினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

;