தமிழகம்

img

ஊடரங்கு உத்தரவை மீறியதாக 1252 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை மார்ச் 26- ஊரடங்கு உத்தரவை மீறி தேவை யின்றி சுற்றித்திரிந்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை  தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கை செய் யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் மக்களை தனிமைப் படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலி யுறுத்தி மாநில அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளது உள்ளதுடன் கட்டுப் பாடுகளையும் விதித்துள்ளது. ஆனாலும்,  மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலும் 144 தடை உத்தரவை மீறிய 1252  நபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு  செய்துள்ளது. மேலும் வதந்தியை பரப்பிய  16 பேர்கள் மீதும் தனிமைப் படுத்தப்பட்டு நிலையிலும் வெளியில் சுற்றித் திரிந்த ஆறு நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;