தமிழகம்

img

கோவை: கேந்திரவித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல்

கோவை சூலூரில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளியில் மாணவன் துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கோவையில் சூலூரில் உள்ள கேந்திரவித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு மாணவன் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 ஆசிரியர்கள் மாணவனை வகுப்பறையில் வைத்து கடுமையாக தாக்கி  உள்ளனர். மேலும் மாணவனின் ஆடையை அவிழ்த்து கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆசிரியர்கள் தாக்குதலால் மாணவனின் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

;