கல்வி

img

CAG அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 182

மத்திய அரசின்கீழ் செயல்படும் “Comptroller and Auditor General(CAG)” துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Clerk
காலியிடங்கள்: 134
சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Auditor/ Accountant
காலியிடங்கள்: 48
சம்பளவிகிதம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு திறன், உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு இதுபற்றிய விபரம் தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cag.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்படுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.9.2019 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;