கல்வி

img

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தில்லி 
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருவதால் 21 நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14-இல் நிறைவடையும் நிலையில், இன்னும் ஒருமாத காலம் ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் நீட், ஜே.இ.இ., யுஜிசி, நெட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்தத் தேர்வுகளுக்கான மறுதேதி ஊரடங்கு முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும்  என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 

;