அறிவியல்

img

சந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பிய புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ!

நிலவின் மிக அருகில் இருந்து, சந்திரயான் 2 செயற்கைக்கோளின் ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்ததில் ஆய்வு மேற்கொள்ள, கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான் 2 செயற்கைக்கோள் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த செயற்கைக்கோளின் ஆர்பிட்டரில் இருந்து, லேண்டர் மற்றும் ரோவர்  கருவிகள் நிலவுப் பரப்பில் மென்மையாகத் தரையிறக்கும் முயற்சியின் போது 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்ட அதி நவீன கேமரா மூலம் நிலவின் தென் துருவத்தின் 100 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் இருந்து, புதிய புகைப்படங்களை எடுத்த  பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில் தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், 100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கிலோமீட்டர் நீளமும் 3 கிலோமீட்டர் விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 5 மீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள் மற்றும் 1 முதல் 2 மீட்டர் மட்டுமே உயரமுள்ள பாறைகளுடன் கூடிய நிலவின் நிலப்பரப்பு புகைப்படங்களில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.  
 

;