tamilnadu

img

மத்திய அமைச்சர் பதவிக்காக முகாமிட்ட அதிமுக அரசு...

அளவில் அணு உலை அமைப்பது குறித்து ஒரு வரையறை உள்ளது ஒரே இடத்தில் அணு உலை குவியலாக இருக்கக்கூடாது என்பது தான் அது. ஏற்கனவே உள்ள அணு உலைகள் 60 முறை செயல்படாமல் நின்று போயுள்ளது. இது எதனால் என்பது குறித்து மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால் என்ன செய்வது? அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வேண்டாம் என்று கூறினாலும் ஆளும் அரசுகள் அதனை அலட்சியப்படுத்துகின்றன. தற்போது அணுக்கழிவுகளை அணு உலைப்பகுதியிலேயே சேமித்து வைக்கப் போவதாக அறிவித்துள் ளார்கள். அணுக்கழிவுகளை பாது காப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் சரிபாதி தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இதுபோன்ற மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் கருத்து கேட்கும் கூட்டங்களை நடத்துவதற்கு அரசு விரும்புவதில்லை. அப்படி நடத்தினாலும் பேரளவிற்கு நடத்தப்படுகிறது. இந்த அணுக்கழிவினால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறும் அதிகாரிகள் மக்களின் கருத்துக்களை கேட்போம் என்று கூறு கிறார்கள். அதே நேரத்தில் சமூக ஆர்வலர் சுப.உதயகுமார் போன்றவர்களை திருடர்களைப் போல துரத்தி துரத்தி கைதுசெய்கிறார்கள். இது கண்டனத்திற் குரியது. 

ஹைட்ரோ கார்பன்
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இப்போராட்டங்களுக்கு அரசு அனுமதி மறுக்கிறது. காவல்துறை யினக் கொண்டு ஒடுக்குவதோடு வழக்குகளை பதிவு செய்கிறது. இது மோசமான ஜனநாயக விரோத செயலாகும். சேலம் 8 வழிச் சாலை பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு அரசின் உத்தரவை தடை செய்துள்ளது.

தற்போது கூட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 23 ஆம் தேதியன்று நடைபெற விருக்கிற மனித சங்கிலி போராட்டத் திற்கு நீதிமன்றம் மூலமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்படி எல்லாவற்றிருக்கும் நீதிமன்றம் செல்வது என்றால் அரசாங்கங்கள் எதற்கு? மக்களின் கொந்தளிப்பைக்கண்டு நடுங்கும் அரசு இதுபோன்ற பொருந்தாத நடவடிக்கைகளில் இறங்குகிறது. மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். அரசின் அணுகுமுறை இப்படியே தொடர்ந்தால் தடைகளை மீறி டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் வெடிக்கும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும். செய்தியாளர் சந்திப்பின் போது சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;