world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஏவுகணைகளை ரகசியமாக கொடுக்கும் அமெரிக்கா 

உக்ரைனுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து ஆயுதங்களை கொடுத்து வரும் அமெரிக்கா. ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலை தீவிரப்படுத்துவ தற்காக நீண்ட தூரம் பயணித்து  தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக அனுப்பி யுள்ளது. நாடாளுமன்றம்  ஒப்புதலுடன்  அனுப் பப்படும் ஆயுதங்களுடன்  ரகசியமாக ஏவு கணைகளையும் அமெரிக்கா அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவிற்கு நிதி வழங்க  துவங்கியது ஜெர்மனி

இஸ்ரேலின் பொய் குற்றச்சாட்டை நம்பி ஐநா அகதிகள் அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தி வைத்த ஜெர்மனி மீண்டும் நிதி வழங்க துவங்கி யுள்ளது.கடந்த ஆண்டு  இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு  12 ஐ.நா ஊழியர்கள் உதவியதாக இஸ்ரேல் ஆதார மற்ற குற்றம் சுமத்தியதை  தொடர்ந்து 16 நாடுகள் நிதியுதவியை நிறுத்தின. இதன் காரணமாக 45 கோடி அமெரிக்க டாலர்கள் வரை ஐநாவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனா செல்ல தயாராகும்  அர்ஜெண்டினாஅதிகாரிகள்

அர்ஜெண்டினாவின் உயர்நிலை அரசு  அதிகாரிகள்  சில வாரங்க ளில் சீனாவிற்கு செல்ல தயாராகி வருவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா வுடனான முரண்பாடுகளை கைவிட்டு வர்த்த கத்தில் இணைய அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர்  மிலேய் திட்டமிடுவதாகவும் சீன பயணத்தில் அர்ஜெண்டினா மத்திய வங்கி யின் தலைவர் சாண்டியாகோ பௌசிலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அமெரிக்கா முழுவதும் பரவும்  மாணவர்கள் போராட்டம் 

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதர வான நிறுவனங்களுடனான உறவை பல்கலைக்கழகங்கள் துண்டிக்க வேண்டும் என அமெரிக்க மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடக்க அமெரிக்க காவல் துறை வன்முறைகளையும் கைது நடவடிக்கைகளை யும் முன்னெடுத்து வருகிறது. கலிபோர்னியா பல் கலைக்கழகத்தில் துவங்கிய போராட்டம் தற்போது ஹம்போல்ட், எமர்சன் கல்லூரி, ஹார்வர்டு பல்கலைக் கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம், கலிபோர்னி யா பல்கலைக்கழகம், பெர்க்லி, மிச்சிகன் பல்கலைக் கழகம் என அமெரிக்கா முழுவதும்  பரவியுள்ளது.

சுதந்திர பாலஸ்தீனம்    அமைத்தால் போர் நிற்கும்

இரு நாடு கொள்கையை அமல்படுத்தி னால் போர் நிற்கும் என ஹமாஸின் உயர் மட்ட அரசியல் தலைவரான கலீல் அல்-ஹய்யா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஹமாஸ் உயர்மட்ட தலைவர்  அளித்த பேட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியும்,பாலஸ் தீன அகதிகளை மீண்டும் கொண்டு வரும் வகையி லும்,  1967 தீர்மானங்களின் படியும்  சுதந்திர பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் போர் நிறுத்தம் சாத்தியம் என தெரிவித்துள்ளார்.

;