world

பிரேசில் பெருவெள்ளத்தில் 39 பேர் பலி 68 பேர் மாயம்

பிரேசிலியா,மே.4- பிரேசிலின் தெற்கே உள்ள ரியோ கிராண்டே மாநிலத்தில் பெய்த கனமழையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

பலத்த மழை மற்றும் வெள்ளத்தின் காரணமான  உருகுவே மற்றும் அர்ஜெண்டினாவின் எல்லையை ஒட்டிய மாநிலமான ரியோ கிராண்டே வில் 497 நகரங்களில் பாதிக்கு மேல் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 68 பேர் காணாமல் போ யுள்ளனர்  என்றும், குறைந்தது 24,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அம்மாநில  சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பல நகரங்களில், தெருக்கள் ஆறுகளாக மாறிவிட்டன, சாலை கள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. நிலச்சரிவுகள் மற்றும் ஒரு சிறிய நீர்மின் நிலையத்தின் அணைக்கட்டு பகுதி இடிந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பெண்டோ கோன் கால்வ்ஸ் என்ற  நகரில் உள்ள இரண்டாவது அணையும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அருகில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. 

காலநிலை மாற்றத்தின் தீவிரத்தின் காரணமாக இவ்வாறு அதிக மழைபொழிவு ஏற்பட்டுள்ளது என   விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். 

;