tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகல்வித்துறையின் கீழ் தொடக்ககல்வியில் 31,336 பள்ளிகளும், பள்ளிகல்விதுறை இயக்குநரகத்தின் கீழ் 6,029 உயர்நிலைபள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 2024-25-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 1 - 8 ஆம் வகுப்புகளில் 2.38 லட்சம் மாணவர்களும், 9 - 11 ஆம் வகுப்புகளில் 23,370 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 11 ஆம் வகுப்புகளில் 62,891 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
 

;