world

img

வளரும் நாடுகளுடன் இணைய விரும்பும் இலங்கை!

வளரும் தெற்கு நாடுகளுடன் இணை ந்து செயல்பட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஈரான் நாட்டு நிதி உதவியுடன் இலங்கையில் மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத்  திட்டம் கட்டி முடிக் கப்பட்டு திறக்கப்பட்டது.  இலங்கைக்கு தொழில் நுட்ப உதவி செய்த ஈரான் நாட்டிற்கும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த  ஈரான்  ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசிக்கும்  நன்றி தெரிவித்து பேசிய ரணில் விக்ரம சிங்கே,  51.4 கோடி டாலர்கள் மதிப்புடைய இந்த நீர்ப் பாசனத் திட்டத்தை ஈரான் அரசின் உதவி யின்றி சாத்தியப்படுத்தி இருக்க முடியாது.   இந்த திட்டத்தின் மூலம் மூன்று தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள சுமார் 6,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீர் விநியோகத் தைப் பெற உள்ளன. அத்துடன் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு   தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் எனவும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மிகுந்த பலன் அளிக்கும் திட்டமாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.  அப்போது தெற்குலக நாடுகளின் குரலை வலுப்படுத்துவதற்கு பாடுபட வேண்டும் என்றும்  குறிப்பிட்டு பேசியுள்ளார். இலங்கை பொருளாதார வீழ்ச்சி அடைந்த தற்கு அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் சர்வ தேச நாணய நிதியத்தின்  கடன்களும் சிக்கனம் என்ற பெயரில் இலங்கை மீது அவர்கள் திணித்த தனியார்மயம்  மற்றும்  மக்கள் நலத்  திட்டங்கள், பொது முதலீடுகளுக்கான  நிதி வெட்டுகளே கார ணம் என தெரிய வந்துள்ள நிலையில், அமெ ரிக்காவை மட்டுமே சார்ந்து இருப்பதை விட ஒவ் வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சி யையும் உறுதி செய்ய குரல் கொடுத்து வரும் தெற்குலக நாடுகளின் அணியில் இணையவே  இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.   மேலும் தெற்குலக  நாடுகள் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவிகளைச்  செய்கின்றன. குறிப் பாக 2024 பிப்ரவரி மாதம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியான் இலங்கை வந்த போது, இலங்கையில் இருந்து தேயிலை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை வழங்கும் பண்டமாற்று வர்த்தக உடன்படிக்கை ஏற் படுத்தப்பட்டது. இதன் மூலம்  இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்து கொண்டு ஈரான்  வழங்கிய கச்சா எண்ணெய்க்கான 25 கோடி டாலர்களை ஈடுகட்ட ஒப்புக்கொண்டது. மேலும் இரு நாடுகளும் அமெரிக்க டாலருக்குப் பதிலாக ஆசிய நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   ஏப்ரல் 1 அன்று சிரியா தலைநகர் டமாஸ்க ஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்திய பத்து நாட்களுக்குப் பிறகு  ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார். மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் எதிர் கொள்ளும் விளைவுகள் மிக கடுமையானதாக இருக்கும்  எனவும்  அங்கு எதுவுமே எஞ்சி இருக்காது  எனவும்  ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான் சென்ற போது எச்சரித்து இருந்தார்.  அமெரிக்காவும் ஈரான் அரசுடன் பொருளா தார உறவுகளை மேற்கொள்ளும் நாடுகள் பொரு ளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என மிரட்டல் விட்டிருந்தது. எனினும் ஈரானுடன் ஐந்து புதிய ஒப்பந்தங்களில் இலங்கை அரசு  கையெழுத்திட்டுள்ளது.  மேலும் ஆற்றல், நீர், விவசாயம், நானோ தொழில்நுட்பம், மருந்து மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளில் இலங்கையின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

;