tamilnadu

img

வங்கக்கடலில் புயல் உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை,

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இது 29-ம் தேதி புயலாக மாற கூடும். இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரியவரும். புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


;