states

img

மத ரீதியில் வாக்கு சேகரிப்பு: பாஜக வேட்பாளர் தேஜஸ்வி மீது வழக்குப்பதிவு

பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.

இதையடுத்து, இன்று 2-ஆவது கட்டமாக கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா சமூக வலைதள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெயநகர் போலீசார் அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

;