tamilnadu

img

மற்ற பாலியல் குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்களா? என்கவுண்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் கேள்வி

ஹைதராபாத்:
ஹைதராபாத் பெண் மருத்துவர்பாலியல் வன்கொலை செய்யப்பட்டசம்பவத்தில், 4 இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்திற்கு ஒருபுறத்தில் வரவேற்பும், மற்றொரு புறத்தில் கண்டனமும் எழுந்துள்ளது.இந்நிலையில், என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சிவாவின் தந்தை ராஜப்பா அளித்துள்ள பேட்டியில், “என்மகன் தவறு செய்திருக்கலாம். ஆனால், இதுபோன்ற முடிவு இருந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.மேலும், “எவ்வளவோ பேர் பலாத்காரம், கொலை செய்கிறார்கள்; அவர்கள் எல்லாம் ஏன் இவ்வாறு நடத்தப்படவில்லை; சுட்டுக் கொல்லப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்ன கேசலுவின் மனைவி ரேணுகா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, போலீசார் தன்னையும் சுட்டுக் கொன்று விடுமாறுகதறித் துடித்துள்ளார்.“ஒரு வருடத்திற்கு முன்னால்தான் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன். எனது கணவருக்குஎதுவும் ஆகாது. திரும்பி வந்து விடுவார் என்றுதான் கூறிக் கொண்டிருந் தேன். ஆனால், என்ன நடந்தது என்றுஎனக்கு தெரியவில்லை” என்று ரேணுகா கூறியுள்ளார்.மேலும், இறந்துபோன மருத்து
வரைப் போல நானும் பெண்தான். என் கணவர் உண்மையில் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். அவரை தூக்கில் போடட்டும்” என்று அரற்றியுள்ளார். நவீனின் தந்தை எல்லப்பாவோ, தனது மகனை போலீசார் வேண்டுமென்றே கொலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். “என்மகனையும் மற்றவர்களையும் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்கு போலீசாருக்கு நிறைய கால அவகாசம் உள்ளது; எதற்காக இவ்வளவு அவசரம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

;