tamilnadu

img

காஷ்மீர்: கெடுபிடி காரணமாக ரத்தாகும் திருமணங்கள்!

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை, கடந்த ஆகஸ்ட்5-ஆம் தேதி மோடி அரசு ரத்து செய்தது.அத்துடன், மாநில அந்தஸ்தைப் பறித்து, லடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர்என இரு யூனியன் பிரதேசமாக மாற்றியது.இதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள் என்பதால், முன்கூட்டியே ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, மாநிலத்தையே ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியது. அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச்சிறை வைத்தது.ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என்று, மோடி அரசு கூறிக்கொண்டாலும், இப்போதுவரை உண்மை நிலை அதுவாக இல்லை. அடக்குமுறைகள் தொடர்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டே உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, வாகனக் கெடுபிடிகள் காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவர், 6 கி.மீ. தூரம் நடந்தே சென்று குழந்தை பெற்ற சோகமும் அரங்கேறியது.இந்நிலையில்தான், காஷ்மீரில் திருமணங்களைக் கூட நடத்த முடியாமல்,  அவற்றை காஷ்மீர் மக்கள் ரத்துசெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் தற்போது பாரம்பரியதிருமண காலம் ஆகும். ஆனால் அங்குஅமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் திருமணங்கள் பெரும் பாலும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் ஏராளமான திருமணங்கள் இப்படி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. திருமணங்கள் ரத்து செய்யப்படுவதால் இறைச்சி வியாபாரிகள், சமையல்காரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் என ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.இந்த திருமண காலத்தில் நடைபெறும் பல வியாபாரங்கள் பாதிப்படைந்து கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

;