tamilnadu

தொடரும் பாலியல் பலாத்கார முயற்சி-மிரட்டல் பெண்ணின் புகாரை வாங்க மறுத்து விரட்டிய உ.பி.மாநில உன்னாவ் போலீசார்

லக்னோ, டிச.8-  பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர்கள் மீது அளித்த புகாரை வாங்க மறுத்து விரட்டியதாக உன்னாவ் போலீசார் மீது மற்றொரு பெண் ஒருவர் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.  பாஜக முதல்வர் யோகி ஆதித்யதாத் ஆட்சியின் கீழ் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் நகரில் கடந்த 11 மாதங்களில் 86 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் 5 பேர் கொண்ட கும்ப லால் பாலியல் பலாத்காரம் செய்து, தீ வைத்து எரிக்கப்பட்டதில் இளம்பெண் ஒரு வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் மக்கள் கொதிப்படைந் துள்ளனர். இந்த அதிர்ச்சியான சம்ப வம் நிகழ்ந்த உன்னாவ் கிராமத்தில் மற்றொரு பெண்ணுக்கு பாலியல் பலாத்கார முயற்சி சம்பவம் நடந்துள் ளது.  இந்துப்பூர் கிராமப் பகுதியை சேர்ந்த அந்த பெண் அதிர்ச்சி அளிக்கும் குற்றச் சாட்டை உன்னாவ் போலீசார் மீது சுமத்தி யுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மருந்து வாங்கச் சென்ற தன்னை கிரா மத்தில் உள்ள 3 பேர் தடுத்து, ஆடை களை பிடித்து இழுத்து, பாலியல் பலாத் காரம் செய்ய முயன்றனர் என்று கூறி, அவர்களை அடையாளம் காட்டியுள்ளார். இதுகுறித்து உன்னாவ் போலீசாரிடம் புகார் அளிக்கச் சென்ற போது, பாலியல் வன்கொடுமை ஒன்றும் நடக்கவில்லை. நடந்த பின் வரவும் என்று போலீசார் கூறி துரத்தி விட்டனர் என்று அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 3 மாதங்களாக காவல் நிலை யத்திற்கு சென்றும், தனது புகாரை அவர்கள் கேட்க கூட இல்லை என்றும் இச்சம்பவத்திற்கு பின் 1090ஐ (மகளிர் உதவி எண்) தொடர்பு கொண்டால் 100-ஐ தொடர்பு கொள்ள கூறினர். அவர்களை தொடர்பு கொண்டால் உன்னாவ் போலீ சாரிடம் புகார் அளிக்கும்படி கூறுகின்ற னர். குற்றவாளிகளான 3 பேரும் வீட்டுக்கு தினமும் வந்து, புகார் கொடுக்கக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து வரு கின்றனர் என்று அந்த பெண் கூறியுள் ளார்.

;