tamilnadu

img

‘நீட்’ தற்கொலைகள் குறித்து எதுவும் தெரியாதாம்!

புதுதில்லி:
‘நீட்’ தேர்வு ஏற்படுத்திய உயிரிழப்புகள் தொடர்பாக எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.எந்தெந்த மாநிலங்களில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரப்பட்டுள்ளது; அவர் கள் எதிர்பார்க்கும் சலுகைகள் என்ன; தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் பலதற்கொலைகள் நிகழ்ந்துள்ளன; அதுபோல நாடு முழுவதும் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை என்ன? அவர்கள் தற்கொலைகள் செய்வதற்கான காரணங்கள் என்ன? என்று நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்.பி.க்கள் கேள்விகள் எழுப்பி இருந்தனர்.

இதற்கு மத்திய சுகாதாரத்துறையும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் எழுத் துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளன. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டுஇருப்பதாகவும், ஆனால், அவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை; தெளிவாக சொன்னால் இந்த மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து எந்தவிதச் சலுகையும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் விட கொடுமை என்ன வென்றால், நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் குறித்து, எந்தவித தகவலும் தங்களிடம் இல்லை என்று மோடி அரசு கூறியிருப்பது தான்.

;