tamilnadu

img

ஜிஎஸ்டி பங்கு ரூ.3200 கோடி எங்கே? மத்திய அரசை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம்

ஆலப்புழா:
ஜிஎஸ்டி வருவாயில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய பங்கு விகிதத்தை பெறுவதற்கு மற்ற மாநிலங்களுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தை அணுகஉள்ளதாக கேரள நிதி அமைச்சர் டாக்டர்.தாமஸ் ஐசக் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசிடமிருந்து கேரளத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி விகிதம் இந்த மாதத்துடன் ரூ.3200 கோடியாக அதிகரித்துள்ளது. உடனடியாக அந்த தொகை கிடைக்காவிட்டால் கேரளம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும். இந்த தொகை எப்போது கிடைக்கும் என்றுகூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டலாம் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாவதை தொடர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவான 4.5 லிருந்து மேலும் வீழ்ச்சி அடையும். கூட்டாட்சி அமைப்பைக்கூட மத்திய அரசு மதிக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள்கூட இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக உள்ளன.இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

;