tamilnadu

img

அரசியலமைப்பு முறையில் ஆளுநர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் உடையது

குடியரசுத் தலைவர் பேச்சு

புதுதில்லி,நவ.23- நாட்டின் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த முறையில் ஆளுநர்களின் பங்களிப்பு முக்கி யத்துவம் உடையது என்று குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சியை பிடித்ததில் மாநில ஆளுநரின் நடவடிக் கையை அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ள னர். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் இந்த பேச்சு அமைந்துள்ளது.  அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்ற மாநாடு சனிக்கிழமையன்று குடியரசுத் தலைவர்  மாளிகையில் நடைபெற்றது.இந்த மாநாட்டை துவக்கிவைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முன்னேற்றமும் அவர்களுக்கான அதிகார மளித்தலும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு போன்று ஒன்றிணைந்திருக்க வேண்டும். தங்க ளுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இத்தகைய மக்களின் முன்னேற்றத்துக்காக சரியான வழிகாட்டுதலை ஆளுநர்கள் வழங்கலாம். கூட்டுறவான கூட்டாட்சி முறையிலும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை கொண்ட  கூட்டாட்சி முறையிலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஆளுநர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது. நாம் அனை வருமே மக்களுக்காக பணியாற்றுகிறோம். மக்களுக்கு பதிலளிக்கவும் கடமைப் பட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
 

;