tamilnadu

img

பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி

புதுதில்லி:

இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருப்பதாக, அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. 

குளோபல் வெல்த் மைக்ரேஷன் ரிவ்யூ (Global Wealth Migration Revidw) என்ற பெயரில் ‘ஏஎப்ஆர் ஏசியா வங்கி’ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகமாகி உள்ளது. இந்தியாவை விட்டு ஆண்டுதோறும் வெளியேறும் பணக்காரர்களில், 5 ஆயிரம் பேர்வரை கோடீஸ்வரர்கள்.


உலக அளவில், மொத்தப்பொருளாதாரத்தில் 36 சதவிகிதம் மட்டுமே பணக்காரர்களிடம் உள்ளது. ஆனால், இந்தியாவில்தான் மொத்த வளத்தில் 48 சதவிகிதம், வெறும் 2 சதவிகித பணக்காரர்களிடம் உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி அளவு வளத்தை மிக குறைவான மக்களே கட்டுப்படுத்துகிறார்கள். இதுவொரு மோசமான நிலையாகும்.

இத்தனை நாட்கள் பிரிட்டனில் நிலவி வந்த பிரெக்சிட் (brexit) பிரச்சனை காரணமாக,அங்கிருந்து அதிக அளவில் பணக்காரர்கள் வெளியேறினார்கள். தற்போது அந்த சூழ்நிலை கொஞ்சம் மாறி உள்ளது. 


பொதுவாக இந்தியாவில் இருந்து வெளியேறும் பணக்காரர்கள் அதிகம் செல்வது அமெரிக்காவாக உள்ளது. அதற்கு அடுத்தபடி இந்திய பணக்காரர் கள் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா செல்கிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் போது அந்நாட்டில் இருந்து, பணக்காரர்கள் வெளியே செல்வார்கள். தங்கள்சொத்தை காக்கவும், வியாபாரம், வர்த்தகத்தை காக்கவும் அவர்கள் இப்படி நாட்டை விட்டு வெளியே செல்வது வழக்கம். அதுதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

;