tamilnadu

img

ரூ. 4 ஆயிரம் கோடி வருமானம் போச்சே... கிரிக்கெட் வாரியம் புலம்பல்

புதுதில்லி:
கொரோனாவால் உலகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருளாதார நிபுணர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது கொரோனா பரவல்.கொரோனா காரணமாக ஐ.பி.எல் தொடர் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுமென பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் புலம்பியுள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல் தொடரின் 13-வது சீசன் கடந்த மார்ச் 29-ஆம்தேதி தொடங்கி மே 24-ஆம் தேதிவரை நடக்கவிருந்தது. கொரோனாதொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்.15-ஆம் தேதி வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவே, காலவரையின்றி ஐ.பி.எல் தொடரை ஒத்திவைப்பது என பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், கிரிக்பஸ் இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில், கொரோனா தொற்று காரணமாக எவ்வளவு பணத்தை பி.சி.சி.ஐ இழக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அருண்துமால், நாங்கள் [கிரிக்கெட்டை] எப்போது தொடங்கப் போகிறோம் என்பது தெரிந்தவுடன் நிதி இழப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்ய முடியும். தற்போதைய நிலையில், தவறவிட்ட ஒவ்வொரு இருதரப்பு தொடரால், நாங்கள் பணத்தை இழப்போம். எங்களால் ஐபிஎல் தொடரை நடத்த முடியவில்லை என்றால், அது மிகப்பெரிய இழப்பிற்கு வழிவகுக்கும். ஒருவேளை ஐ.பி.எல்நடக்காமல் போனால் சுமார் ரூ.4000கோடி வருவாய் இழப்பு ஏற்படும்என்றார். மேலும் அவர் கூறுகை யில், கிரிக்கெட் போட்டிகள் நடை பெறாதது உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், வீரர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றன. பி.சி.சி.ஐ  கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் பிழைத்தால் தான் ஐசிசி பிழைக்க முடியும். உலக கிரிக்கெட்டை புதுப் பிக்க அனைத்து வாரியங்களும் ஆரோக்கியமான நிதி நிலையில் இருப்பது மிகவும் முக்கியம். கிரிக் கெட் பிழைக்க வேண்டுமானால், எங்களுக்கு அதிகப் போட்டிகள் தேவை. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாடுகள் எல்லா போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால், நாங்கள் விளையாட்டில் ஆர்வத்தை இழப்போம்.கிரிக்கெட்டிற்கு எவ்வாறு மீண்டும் புத்துயிர் அளிப்பது, இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பதுகிரிக்கெட் வாரியங்கள் கொள்கை களை வகுக்க வேண்டும்.உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி துவங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குமென நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

;