tamilnadu

img

3.20 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

புதுதில்லி:
கடந்த 5 ஆண்டுகளில்  இந்தியாவில் 3,20,488 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வறுமையால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவல நிலை நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது.14 வயதுக்குக் குறை வான குழந்தைகளை வேலைக்கு அனுப்பு வது சட்டப்படி குற்றமாகும்.2014 முதல் 2018 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 3,20,488குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள தாக ஜூலை 8 ஆம் தேதி மக்களவையில் மத்திய தொழிலாளர்- வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட இக்குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 16,540 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 9,034 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 66,169 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 22,114 குழந்தைத் தொழிலாளர்களை அரசு மீட்டுள்ளது. தமிழகத்தைப்பொறுத்தவரையில் 2018-19ஆம் ஆண்டில் 3,021 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.

;