tamilnadu

img

உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது...

தில்லி 
உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது... ண்ணுக்குத் தெரியாத கொடூர வைரஸான கொரோனா உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகளை 6 மாத காலமாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. பல்வேறு வசதிகள் கொண்ட வளரும் நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அவற்றுடன் போராடி வருகிறது. 

இந்நிலையில், உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி (ஆக., 21  - மதியம் 2 மணி) மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7.97 லட்சமாக உள்ளது. பல நாடுகளில் கொரோனா நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இன்று இரவுக்குள் உலகின் கொரோனா பலி எண்ணிக்கை 8 லட்சத்தை கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்...

1. அமெரிக்கா  - 1.77 லட்சம் 

2. பிரேசில்  - 1.12 லட்சம் 

3. மெக்ஸிகோ  - 58,481 

4. இந்தியா  - 54,975 

5. பிரிட்டன்  - 41,403

6. இத்தாலி  - 35,418      

7. பிரான்ஸ்  - 30,480

8. ஸ்பெயின்  - 28,813

9. பெரு  - 27,034

10. ஈரான்  - 20,264 

;