tamilnadu

img

சுகாதாரத்தில் நாட்டிலேயே கேரளா முதலிடம்

புதுதில்லி:
சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை, ‘நிதி ஆயோக்’ அமைப்பு செவ்வாயன்று வெளியிட்டுள்ள நிலையில், அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நோய்களை வரும் முன் காப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நோய்களைத் தடுப்பது உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் உலக
வங்கி ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், குழந்தைகள் மற்றும்பெண்கள் நலன், அடிப்படைக் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும் கேரளத்திற்கே முதலிடம் கிடைத்துள்ளது.பிறந்ததும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2030 ஆண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, கேரளமும், தமிழகமும் இப் போது எட்டிவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், பாஜக ஆளும் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு, அனைத்துவகையிலும் கடைசி இடமே கிடைத்துள்ளது.‘நிதி ஆயோக்’ அமைப்பானது, 2017-18 ஆம் ஆண்டுக்கான சுகாதார செயல் திறன் அடிப்படையில், பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று வகைப்படுத்தி, மாநிலங்களில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்தான், பெரிய மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை கேரளமும், இரண்டாம் இடத்தை ஆந்திராவும், மூன்றாவது இடத்தை மகாராஷ்டிரா மாநிலங்களும் பிடித்துள்ளன. 

இதில் கேரளாவின் ஒட்டு மொத்தசெயல் திறன் மற்றும் குறியீட்டுக்கு 74.01 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் சொந்த மாநிலமானகுஜராத்திற்கு, 4-ஆவது இடம் வழங்கப் பட்டுள்ளது. 5-ஆவது இடத்தை பஞ்சாப் மாநிலமும், 6-ஆவது இடத்தை இமாச்சலப் பிரதேசமும், 7-ஆவது இடத்தை ஜம்மு - காஷ்மீர் மாநிலமும், 8-ஆவது இடத்தை கர்நாடகாவும் பிடித்துள்ளன.ஆனால், பெரிய மாநிலங்கள் வரிசையில், கடந்தமுறை 3-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டிற்கு, இந்தமுறை 9-ஆவது இடமே தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செயல் திறன் குறித்த குறியீட்டு மதிப்பெண்ணைப் பொறுத்தவரை, கடந்தமுறையைவிட இந்த முறை 2.97 புள்ளிகள்குறைத்து, 60.41 புள்ளிகளே தமிழ்நாட்டிற்குவழங்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலம் 10-ஆவது இடத்திலும், மேற்குவங்கம் 11-ஆவது இடத்திலும், ஹரியானா 12-ஆவது இடத்திலும் வந்துள்ளன. கடைசி இரு இடங்களில்தான் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் (முறையே 19, 20) வந்துள்ளன.

சிறிய மாநிலங்களில் மிசோரம் முதலிடத்தையும் செயல்திறன் வளர்ச்சி அடிப்படையில் திரிபுரா, மணிப்பூர் முதல் இரண்டுஇடங்களையும் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கூடுதல் செயல் திறன் மேம்பாட்டில் ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

;