tamilnadu

img

இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் போதுமான அளவிற்கு இல்லை

புதுதில்லி:

இந்தியாவில் 50 லட்சம் சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளபோதிலும், நாட்டின் தேவைக்கேற்ற விதத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை இல்லை என்றும், உண்மையில் சொல்லப்போனால் இலங்கை, சீனா, தாய்லாந்து, இங்கிலாந்து, பிரேசில் நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவான அளவிலேயே இந்தியாவில் ஊழியர்கள் உள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரிய வருகிறது.


இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள் எண்ணிக்கையானது, தில்லி, கேரளம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய அதே சமயத்தில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மிகவும் மோசமான நிலையிலிருப்பதாக அந்தத்தரவுகளிலிருந்து தெரியவருகிறது.


இந்தியாவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 சதவீத நிலையங்கள் டாக்டர்கள் இல்லாமலும், 38 சதவீத நிலையங்கள் ஆய்வுக்கூட நுட்பநர்கள் இல்லாமலும், 16 சதவீதநிலையங்கள் மருந்தாளுநர்கள் இல்லாமலும் செயல்படுகின்றன என்று உலக சுகாதார ஸ்தாபனம் தென்கிழக்கு ஆசியா பொது சுகாதார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்று குறிப்பிட்டிருக்கிறது. (ந.நி.)


;