tamilnadu

img

தில்லி வன்முறையால் பாதித்தவர்களுக்கு அடைக்கலம் தர வேண்டாம்... ஜேஎன்யு துணைவேந்தர் அறிக்கை

புதுதில்லி:
தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அடைக்கலம் அளிக்க வேண்டாம் என்றுபல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தை தங்குவதற்கு பயன்படுத்துமாறு வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு மாணவர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ளாத பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்கலைக்கழகத்தைப் புகலிடம் ஆக்கவேண்டாம். தேவைப்பட்டால் உதவிப்பொருட்களைச் சேகரித்து அவர்களுக்கு வழங்கி உதவலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

;