tamilnadu

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை அளிக்கும் முடிவை கைவிடுக.... முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி வலியுறுத்தல்....

புதுதில்லி:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனைஅளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும்உச்சநீதிமன்றம் விமர்சனங்களை தயாராக இருக்க வேண்டும் என்றும் மூத்த சட்ட நிபுணரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்த பிரசாந்த் பூஷணின் டிவிட்டர் பதிவுகளுக்காக அவர் மீது உச்சநீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி என அறிவித்தது.இந்த பலரும் விமர்சித்தனர்.  இந்த வழக்கு விசாரணை யின்போது பிரசாந்த் பூஷண், ‘நான் வெளியிட்டகருத்துகள் மூலம் எனது கடமையைச் செய்திருக்கிறேன். இதில் குற்றமென்றால் எனக்கு தண்டனை வழங்குங்கள். மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டு வழக்கை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்குஒத்தி வைத்து அன்று தண்டனை அறி விப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அட்டர்னி ஜெனரலும் மூத்த சட்ட நிபுணருமான சோலி சொராப்ஜி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷண்விவகாரத்தில் அதிகப்படியான அளவில் நடவடிக்கை எடுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். நீதித்துறை ஊழல் பற்றிய ஆதாரங்களுடன் தனது புகார்களை நிரூபிக்க பிரசாந்த் பூஷணுக்கு அனுமதி தர வேண்டும்.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிரசாந்த் பூஷணுக்கு அறிவுரை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம். எச்சரிக்கை செய்யலாம். ஆனால் தண்டனை அளிப்பது தேவையற்றது. மக்கள் பலரும் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரின் நம்பிக்கைகள் உச்சநீதிமன்றத்துக்கு பிடிக்காமல் போவதால் அவர்களை எல்லாம் தண்டிக்க முடியுமா என்ன?

பிரசாந்த் பூஷண் தான் கூறிய புகார்களை நிரூபிக்க முனையும் பட்சத்தில், அவரை உச்சநீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும்?ஒரு வேளை அவரது புகார்கள் அடிப்படை யற்றவை என நிரூபிக்கப்பட்டால் பிறகு அவரைதண்டிக்கலாம். ஆனால் புகார்களை சொன்னதற்காகவே அவரை தண்டிப்பது சரியல்ல.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;