tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- இந்தியா அனைவருக்குமானது.
ச.சா - அப்புறம் எதுக்கு மத ரீதியா பிரிக்குறீங்க..??
 

பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா :- நான் அரைமணி நேரம் பேசினால், அதில் 25 நிமிடங்கள் தில்லியின் வளர்ச்சி பற்றி பேசியிருப்பேன்.
ச.சா - போராட்டக்காரர்கள் பாலியல் குற்றங்கள் பண்ணுவாங்கன்னு பேசுறது வளர்ச்சி பற்றிய பேச்சா..??
 

நடிகர் ரஜினிகாந்த் :- குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக களத்தில் போராடுவேன்.
ச.சா - ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் களத்துல போராடிட்டு இருக்காங்களே..?
 

செய்தி :- அமெரிக்க சபாநாயகருடன் கைகுலுக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மறுப்பு.
ச.சா - இவரோட உக்ரைன் திருவிளையாடல்கள தொடர்ந்து அம்பலப்படுத்துறாங்கள்ல..அதனால மறுத்துட்டாரோ..??

;