politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவராத்திரி விழாவில் துணைக் குடியரசுத்தலைவர் பங்கேற்பு.
ச.சா - வன ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதா குற்றச்சாட்டு இடத்துல நடக்குற விழாவுக்கு இவங்கள்ல்லாம் வந்தா யாரு நடவடிக்கை எடுப்பாங்க..??
 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்:- தேசியவாதத்தை சிலர் ஹிட்லரோடு தொடர்புபடுத்துகிறார்கள்.
ச.சா - உங்க அமைப்பே ஹிட்லர கதாநாயகனா நினைக்குறதுதான..??
 

செய்தி :- குஜராத்தில் டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்.
ச.சா - தேர்தல் நேரத்துல மோடிக்காக அமெரிக்காவுல டிரம்ப் பேரணி நடத்துனாரு.. இப்போ அவருக்காக இந்தியாவுல இவர் நடத்துறாரு..!!
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- வரி வருவாயை அதிகரிக்க நிபுணர்கள் குழு.
ச.சா - நியாயமா வர வேண்டிய வருவாயை மத்திய அரசுகிட்டருந்து கேக்குறதுக்கு குழு அமைப்பீங்களா..??

;