tamilnadu

img

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை சூறையாட முயலாதீர்கள்!

புதுதில்லி:
இந்திய ரிசர்வ் வங்கியின் 22-ஆவதுஆளுநராக, 2008 முதல் 2013 வரை பதவிவகித்தவர் டி. சுப்பாராவ், உலகப் பொருளாதார மந்த நிலைக் காலத்திலும் (2008)இவர்தான் ஆளுநர். அப்போது இந்தியநிதித்துறையை திறமையாக கையாண்டதற்காக பாராட்டப்பட்டவர் களில் டி. சுப்பாராவும் ஒருவர் ஆவார்.இந்நிலையில், ‘சிஎப்ஏ’ (Chartered Financial Analysts of India) நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கும் சுப்பாராவ், அதில், நடப்பு பொருளாதார விஷயங்கள் குறித்து, மத்திய அரசுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.“ரிசர்வ் வங்கியிடம் ரூ. 9 லட்சம் கோடி உபரி நிதி உள்ளது. அதாவது மொத்த நிதியில் 27 சதவிகிதம் உபரியாக உள்ளது. பிமல் ஜலான் தனது பரிந்துரையில் ரூ. 1.5 லட்சம் கோடி முதல் ரூ. 3 லட்சம் கோடி வரை 3 ஆண்டுகளில் அரசுக்கு அளிக்கலாம் என பரிந்துரை அளித்திருப்பதாக தெரிகிறது.

ஆனால், ரிசர்வ் வங்கி மிகவும் சுதந்திரமாக செயல்படுவது மிகவும்அவசியம். குறுகிய கால ஆதாயத் துக்காக எந்த நடவடிக்கையையும் அரசு வற்புறுத்தி பெறக்கூடாது. ரிசர்வ்வங்கி தன்வசம் கொண்டுள்ள ரிசர்வ்தொகையானது, பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்கூட, ரிசர்வ் வங்கியின் கையிருப்பையும் கருத்தில் கொண்டுதான் முதலீடுகளை மேற்கொள்வார்கள். சர்வதேசசெலாவணி நிதியம்கூட, ரிசர்வ் வங்கியின் கையிருப்பைப் பார்த்துத்தான், நமது நாட்டிற்கு கடன் வழங்கும்.எனவே, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட வேண்டும்தான். அதற்காக ரிசர்வ் வங்கியிடம் உள்ளஉபரி நிதியின் மூலமே அதை எட்ட நினைப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. இவ்வாறு சுப்பாராவ் கூறியுள்ளார்.

;