tamilnadu

img

மாட்டுச்சாணம், கோமியம் மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம்... பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பெண் எம்எல்ஏ

திஸ்பூர்:
அசாம் மாநிலம், ஹஜோ சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் சுமன் ஹரிபிரியா. இவர், அசாம் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அப்போது, மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத் தைப் பயன்படுத்தி, கொரோனா நோயைக் குணப்படுத்தலாம் என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“மாட்டுக் கோமியம், மாட்டுச் சாணத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கின்றன. முன் காலத்தில், முனிவர்கள் தங்கள் ஆசிரமத்தில் மாடுகளை வளர்த்து வந்தனர். இதனால் ரிஷிகள் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். 

கேன்சரை நாம் மாட்டுக் கோமியம், மாட்டுச் சாணத்தைக் கொண்டு குணப்படுத்த முடியும். குஜராத்தில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகள் மீது மாட்டுக் கோமியத்தைத் தடவுகிறார்கள். கேன்சர் நோயாளிகளுக்கு பஞ்சகவ்வியம் (நெய், பால், கோமியம், சாணம், தயிர்) கொடுக்கிறார்கள். இந்த மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது. இதைகொடுக்கும் போது நோயாளிகளை பசுவின் அருகே அமரவும் வைக்கின்றனர். ரிஷிகள் மாட்டுச் சாணத்தைத் தீயில் கொளுத்தி யாகங்கள் நடத்தினார்கள். இந்த முறையால் யாகம் நடத்தும் பகுதியைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்குக் காற்று சுத்தமானது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக் கூடிய தொற்று நோய்என்பதால், அதையும் மாட்டுச் சாணம், கோமியம் மூலம் சரிசெய்யமுடியும்” என்று சுமன் ஹரிப்பிரியா கூறியுள்ளார்.

மேலும், மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அசாம்மாநில பாஜக தலைவரும், நிதிஅமைச்சருமான ஹிமந்தா பிஸ்வாஸ் ஆய்வு செய்து வருவதாகவும், அவரிடம் இருந்துதான், இந்தமாட்டுக் கோமியம், சாணத்தின் மகத்துவம் பற்றி கற்றுக் கொண்டதாகவும் ஹரிப்பிரியா ‘பெருமையுடன்’ குறிப்பிட்டுள்ளார்.

;