tamilnadu

img

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை நெருங்கியது

தில்லி 
ஆசியாவின் கொரோனா மையமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை  நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டின் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 52 ஆயிரத்து 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 13.89 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்றயை தினத்தில் பரிசோதனைகள் அதிகமாக எடுக்கப்பட்டதால் இன்று இரவுக்குள்  கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை நெருங்கும் சூழல் உருவாகியுள்ளது. 

மேலும் 722 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 32,128 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 8.87 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் 4.69 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

உலகின் தினசரி கொரோனா பாதிப்பில் (கடந்த 24 மணிநேர) இந்தியா 2-வது இடத்தை பிடித்தது.

முதல் இடம் : அமெரிக்கா  - பாதிப்பு  : 67,413,  பலி : 908, குணம் : 33,800

மூன்றாம் இடம் :  பிரேசில்  -  பாதிப்பு  : 48,234,  பலி : 1,111, குணம் : 24,199

;