tamilnadu

img

பட்டினியில் குழந்தைகள்

புதுதில்லி, ஏப்.12- கொரோனா தாக்கத்தால் இந்தியாவை இருள் சூழ்ந்துள்ள நிலையில் சாலையோரங்களில் பொருட்களை விற்றுப்பிழைக்கும் குழந்தைகள் (ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளதால்) பட்டினியோடு தூங்கச் செல்கின்றன. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தியாவில், கிட்டதட்ட 47.2 மில்லியன் குழந்தைகள் உள்ளன. இந்தியா, உலக அளவில் அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும்.இதில் கிட்டத்தட்ட 40 மில்லியன் குழந்தைகள் மிகவும் வறுமையில் உள்ளவர்கள்.  இவர்கள் கிராமங்களில் உள்ள பண்ணைகளில், விவசாய நிலங்களில் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். சாலையோரங்களில் பேனாக்கள், பலூன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்றுவருகிறார்கள். கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்  குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எப்படி சாப்பிடுவது, எப்படி நாட்களை கழிப்பது என்ற அச்சத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் இரவு உணவின்றி தூங்குகின்றனர்.

சாலையோரக் குழந்தைகளுக்காக தொண்டாற்றி வரும் சேத்னா என்ற குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குநர் சஞ்சய் குப்தா பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்து தூங்குகின்றனர்.  ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இந்தக் குழந்தைகள எங்கே தங்குவார்கள். தில்லியில் மட்டும் தெருக்களில் வசிக்கும் குழந்தைகள்  70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவுதான். இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். அவர்களிடம் பெரும்பாலும், மொபைல்போன்கள் உள்ளன. எனவே எங்கள் அமைப்பின் மூலமாக அவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை அனுப்புகிறோம். அவர்களும் பதிலுக்கு சில வீடியோக்களை, டிக்டாக் வீடியோக்களை அனுப்புகின்றனர். அவை அவர்கள், வாழ்க்கையில் இருக்கும் எதிர்கால பயத்தை உணர்த்துகிறது.

சில குழந்தைகள். தங்கள் பெற்றோர் வேலை இல்லாமல் இருப்பதால், வீட்டு வாடகை, ரேஷன் கடையில் அரிசி வாங்குவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து சிந்திக்கிறார்கள். சாலையோர சிறுவன் ஒருவன், தான் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து உணவு வந்து வழங்கியதாகவும்  குறிப்பிட்டுள்ளான். மேலும், சிறுவன் ஒருவன், நாங்கள் விறகு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல அனுமதிக்கபடவில்லை. நாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளான்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு க்கான தில்லி ஆணையம்  தலைநகரில் உள்ள தெரு குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உணவு விநியோகித்து வருகிறது. இன்னும் பல நகரங்களிலும், உள்ளூர் அரசாங்கங்களும் தொண்டு நிறுவனங்களும் குழந்தைகள் மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றன.  இதுபோன்ற குழந்தைகள் நாள் ஒன்றிற்கு மூன்று வேளை உணவருந்துகிறார்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஊரடங்குக்கு பின் அரசு வழங்கியுள்ள தொலைபேசி (1098)அழைப்புகளில், குழந்தைகள் தொடர்பான தகவல்களைப் பெற  300,000 அழைப்புகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

-கீதா பண்டே,
(பிபிசி செய்தி நிறுவனம்) புதுதில்லி.

;