tamilnadu

img

சாத்தான்குளம்: மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி:
சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் படுகொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகரான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியசிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில்அடைத்தனர். மேலும் அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை ஆகிய 5 போலீசாரையும் சிபிசிஐடி கைது செய்தது. இவர்களில் எஸ்ஐ பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5பேரையும் சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்ததரவிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் ஒரிரு நாட்களில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது

;