tamilnadu

தொழுதூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

குடவாசல், அக்.10- திருவாரூர் மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் தொழுதூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், மாணவர்களை தண்டனை என்ற பெய ரால் பிரம்பால் அடிப்பது, மேலும் அவர்கள் பெற்றோர் முன்பாக இழி வாக பேசுவது, ஆசிரியர்களை சாதி யைக் குறிப்பிட்டு தரக்குறைவாக திட்டு வதும், கல்லூரிக்கு மரச் சாமான்கள் வாங்குவது முதல்வரின் சொந்த பர்னிச்சர் கடையிலேயே அதிக விலை கொடுத்து பொருள்கள் வாங்குவது, மாணவர்களிடம் கல்லூரி சேர்க்கை கட்டணம் வாங்கியதில் ஊழல் என பல்வேறு புகாரையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வியா ழக்கிழமை கல்லூரி எதிரே கல்லூரி முதல்வர் தமிழரசை உடனே பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றுவார்கள் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து வலங்கைமான் வட்டாட்சியர் இன்னாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அழைப்பின் பேரில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஜி.பழனிவேல் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவல கத்தில் வட்டாட்சியர் தலைமையில் புதன்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் அரசு பாலிடெக்னிக்கில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளை துறைரீதியாக விசாரணை செய்வது, கல்லூரி முதல் வர் தமிழரசு மீது கூறிய குற்றச்சாட்டு கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப் பது, பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற முறைகேடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியும், கல்லூரி முதல்வர் தமிழரசு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது துணை வட்டாட்சியர் மகேஷ், ஆய்வா ளர் கருணாநிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் என்.இராதா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் டி.சண்முகம், என்.பாலையா, நகர செயலாளர் எஸ்.சாமி நாதன், வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராஜ், மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சந்தி ரோதயம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

;