tamilnadu

img

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹங்ஸுக்கு கொரோனா

கலிபோர்னியா 
அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹங்ஸ். 2 முறை சிறந்த நடிகருக்கான (பாரஸ்ட் கம்ப் மற்றும் பிலாடெல்பியா ஆகிய இரு படங்களுக்காக) ஆஸ்கர் விருதை வென்ற இவர் திடீரென அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையைக் கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நானும் எனது மனைவி ரீட்டாவும் படத் தயாரிப்பு தொடர்பான நிகழ்வுகளுக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தோம். அங்குச் சென்றதும் என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. உடல் சோர்வு, சளி பிரச்சனை என அடுத்தடுத்து உருவானது. எனது மனைவிக்கும் லேசாகக் காய்ச்சல் அடிக்க நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்தோம். மருத்துவ அறிக்கையில் எங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளார். 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொழுதிலும் அதைப் பற்றிப் பயப்படாமல் தனது ரசிகர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் டாம் ஹங்ஸிற்கு வாழ்த்துக்கள் குவிகிறது. 

;