tamilnadu

img

தேசிய அளவிலான விளையாட்டு போட்டி பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

சேலம் , மே 8- குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகளபோட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சேலம்திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. குஜராத் மாநிலம், வாபியில் தேசிய அளவிலான டேக்வாண்டோ, ஸ்கேட்டிங் மற்றும் தடகளப் போட்டிகள் கடந்த மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில்நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 1800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்பங்கேற்றனர். இதில் டேக்வாண்டோ போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் 29 பேரும், ஸ்கேட்டிங் போட்டியில்5 பேரும், தடகளப் போட்டியில் ஒருவர் என மொத்தம்35 பேர் தங்க பதக்கங்களை வென்றனர். இதில் சேலம் மகரிஷி பள்ளியைச் சேர்ந்த லக்சனா, தீபக்ராஜா, லஷ்வின், சந்தோஷ் உள்ளிட்டோர் புதனன்று ரயில் மூலம் சேலம் திரும்பினர். இவர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் அவர்களின் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள்உள்ளிட்டோர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

;